<> இணையக் காவடிச்
சிந்து <>
எங்களிணை யத்திற்கிலை ஈடு-அது
எம்மனைய னோர்வதியும் வீடு
- உளம்
இன்புறஇ னித்திடும்தேன் கூடு
வந்து கூடு(ம்)
அன்பர் நாடும் - அனை
வர்க்கும்பொது வென்றுளபண்
பாடு (1)
இந்தியரும் இங்கிலந்துள்
ளோரும் - வேறு
எங்குமுள நாடுபுகுந் தோரும்
- ஒரு
சாதியென உவகையுடன் சாரும்
இணையம் பாரும்!
இதற்கு நேரும் - எங்கும்
இல்லைஇ துணர்ந்துபகை தீரும்! (2)
ஆயிரம்பல் லாயிரமாய்ச் சேர்ந்து
- நாம்
அங்குமிங்கும் சேதிகளைத்
தேர்ந்து - வெகு
ஆழமுடன் அலசிடுவோம் கூர்ந்து
இணையம் சார்ந்து
எதையும் ஓர்ந்து - செயும்
எவருமிங்கு விழுவதில்லை சோர்ந்து!
(3)
கவிதையொடு கட்டுரைச மைப்போம்
- பிறர்
காணமன ஓவியம்முன் வைப்போம்
-தமிழ்க்
காதல்தரு கனிகளைச்சு வைப்போம்
இன்பம் துய்ப்போம்
துன்பம் பொய்ப்போம் - இந்த
இணையம்வழி எவரையுமி ணைப்போம்
(4)
கவிதையறி வென்பதெனக் கில்லை
- என்ற
கவலைமுன்பு கொண்டடைந்த தொல்லை
- இனிக்
கடுகளவு மென்மனத்தில் இல்லை
இணைய வில்லை
எடுத்து ஒல்லை - இன்றி
இனித்தொடுப்பேன் இனியதமிழ்ச்
சொல்லை (5)
No comments:
Post a Comment