<> குரு வடிவினன் <>
உருவினில் பெரியன் வருமிடர் அகல
....உலகினர் வழிபடு மிறைவன் – அவர்
......உளமெனும் குடிலினில் உறைவன்
....உலகினர் வழிபடு மிறைவன் – அவர்
......உளமெனும் குடிலினில் உறைவன்
திருமுறை ஓதி இருவர்முன் கயிலை
....செலக்கரி பரியுடன் விரைய – ஔவை
......தினமவன் திருவுளம் கரைய
....செலக்கரி பரியுடன் விரைய – ஔவை
......தினமவன் திருவுளம் கரைய
ஒருமுக முடனே உரைதுதி கேட்டே
....ஒருநொடி யளவினில் வரையை - அவள்
.......உறவர மருளிய துரையைக்
....ஒருநொடி யளவினில் வரையை - அவள்
.......உறவர மருளிய துரையைக்
குருவடி வாக வழிபடின் உள்ளக்
....குகையினில் விலகிடும் இருளே - அவண்
.......குடிகொளும் பரசிவப் பொருளே!
....குகையினில் விலகிடும் இருளே - அவண்
.......குடிகொளும் பரசிவப் பொருளே!
.....அனந்த் 12-9-2018 விநாயக சதுர்த்தி
No comments:
Post a Comment