சந்தவசந்தம்
கவியரங்கம் - 42
தலைவர்:
கவிமாமணி இலந்தை சு. இராமசாமி
தலைப்பு: வெள்ளம் அளித்த விடை
கவிதை: : அனந்த் (அனந்தநாராயணன்)
தலைப்பு: வெள்ளம் அளித்த விடை
கவிதை: : அனந்த் (அனந்தநாராயணன்)
இறைவணக்கம்:
வெள்ளமுண்டு
விடையுமுண்டு மெய்யடியார் கள்ளமில்லா
உள்ளமுடன் ஆற்றுபணி விடையுமுண்டு உன்றனுக்கே
எள்ளனைத்தும் தகுதியிலா எளியனெனக் குன்னருளை
வெள்ளமெனப் பொழிந்துகவி வித்தகமுண் டாக்குவையே.
உள்ளமுடன் ஆற்றுபணி விடையுமுண்டு உன்றனுக்கே
எள்ளனைத்தும் தகுதியிலா எளியனெனக் குன்னருளை
வெள்ளமெனப் பொழிந்துகவி வித்தகமுண் டாக்குவையே.
தலைமை
வணக்கம்:
கவிமா
மணியென்பார் கவிஞருக்குள் வேழமென்பார்
புவியே
இவர்கரத்துள் புகுமென்பார் தமிழார்வம்
அவியா(து)
எரிகின்ற அகலென்பார் அவர்க்குக்கை
குவியார்
இலையென்பார் கவிப்பேன்என் தலைஅவர்க்கே.
அரங்கக்
கவிதை:
<>
வெள்ளம்
அளித்த விடை <>
ஊனைத்
தின்னும் வனவிலங்கோ
..
உயிரைத் தின்னும் ஒருபேயோ
ஈனம்
மிகுந்த உயிரினமோ
..எமனார்
விடுத்த பெருங்கயிறோ
வானைப்
பிளந்து வந்தெங்கள்
..
வாழ்வைப் பறித்த பேய்மழையே!
ஏனிக்
கொடுமை? எளியோங்கள்
.. என்ன
பிழைதான் ஆற்றிவிட்டோம்?
****
சென்னைவாழ்
மக்களின் வேதனையை - நன்கு
..
சித்தரிக் கும்இந்த கேள்விக்குநீ
என்ன
விடையை அளித்திடுவாய்- என்று
..
இன்றந்த மாரியை நான்வினவ
அன்னை
யவளும்தன் வாய்திறந்து - மிக்க
..
அன்பு ததும்ப நவிலலுற்றாள்
முன்னமவ்
வள்ளுவன் வான்மழையின் - தன்மை
..
மொழிந்த அறிவுரை கேட்டிலையோ?**
இன்னும்
விளக்கிட ஓர்கதையை
..
இங்கே உரைக்கின்றேன் ஆங்கதன்பின்
என்னைப்
பழித்திடும் மாந்தர்கள்தம்
.. எண்ணம்
தெளிந்துண்மை தோன்றிடுமே.
***
துள்ளி விளையாடும்
மீன்களுண்டு - கரை
.. தள்ள
முயலும் அலைகளுண்டு
கொள்ளை
அழகுடன் பூர்ணைநதி – ஓடும்
…
கோலத்தைக் காண்பவர் கூட்டமுண்டு
காலடி
என்னும்சிற் றூரிடையே – பல
..
காலமாய் ஓடும்அவ் வாற்றினிலே
சீலம்
மிகுந்தவோர் மாதரசி – நித்தம்
..
சென்று குளித்து மகிழ்வதுண்டு
ஆரியை
என்னும்நற் பேருடைய – அந்த
..
அன்னை வயிற்றினைத் தேர்ந்தெடுத்துத்
தூரிய
ஞானச் சுடரொளியாய் – வந்து
..
தோன்றினன் சங்கர தேசிகனே.
தாயின்
மனத்தைக் குளிரவைக்கும் – எழில்
..
தண்மதி யாகத் திகழ்ந்துவந்த
தூயவன்
சேவையில் தோய்ந்தவளும் – ஒரு
..
துன்பமு மில்லா திருந்துவரத்
தேகம்
தளரும் முதுமையிலே – முன்போல்
..
தினமும் நதிக்கு நடந்துசெல்லும்
வேகம்
குறைந்திடக் கண்டுமனம் – கொள்ளும்
..
வேதனை தன்னை மகன்உணர்ந்தான்
நன்மனம்
கொண்டவோர் நங்கையிடம் – பிக்ஷை
..
நாடிச்சென் றாங்கவள் ஏழ்மைகண்டு
பொன்மழை
பெய்திடச் செய்தவனாம்# – அந்தப்
..
புண்ணியன் மேலுமோர் விந்தைசெய்தான்:
பூர்ணை
நதிக்கரை சார்ந்தவளின் – புகழ்
..
போற்றிப் பரவித்தன் தாய்விரதம்
பூர்ண
மடைந்திட வேண்டுமெனில் – ஆறு
..
போகும் தடத்தினை மாற்றிமனை
அண்மையில்
செல்லென வேண்டிநின்றான் – அந்த
… ஆறும்
அதற்குடன் சம்மதித்தாள்
கண்முனம்
ஓடும் பெருநதியை – ஆர்யை
..
கண்டுசேய் தெய்வ மெனஉணர்ந்தாள்
அன்னைக்கு
ஆற்றும் கடமையிலே – ஓர்
..
அணுவும் பிறழாத சங்கரனின்
தன்னல
மில்லாத செய்கையினால் - வெள்ளம்
..
தடம்மாறிச் சென்றதில் சேதமில்லை
முன்னம்
பகீரதன் கங்கையளைத் - தன்
..
முன்னோர் கதிபெறச் செய்வதற்கு
மண்ணில்
வரச்செய்த சாதனைக்கும்- அவன்
..
வாக்கு மனம்செயல் யாவினிலும்
தெள்ளத்
துலங்கிய தூய்மைகண்டு - அந்தத்
..
தெய்வம் துணைநிற்ற(து) எண்ணிடுவாய்
கள்ளத்
தனத்துடன் நீர்த்தடத்தைப்- பல
..
கட்டுமா னங்களால் மாற்றிடுவோர்
வெள்ளத்தின்
சீற்றத்தைத் தூண்டிமக்கள் - பெரும்
..
வேதனைக் குள்ளாக வைத்திடுவார்
உள்ளத்தில்
நல்லோர் துணையிலினி - மீண்டும்
..
உன்னதம் எய்த வழிவகுப்பீர்!
****
இன்ன
வகையிலே மாரியன்னை – என்றும்
..
இயற்கை செயல்படும் போக்குரைக்க
என்னுள்
தெளிவு பிறந்ததுவே – இனி
..
என்றும் அவளருள் வேண்டிநிற்பேன்.
…அனந்த்
குறியீடு
விளக்கம்:
1)
**
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம்
எல்லாம் மழை - குறள் 2.15
2)
# பிக்ஷை
கேட்டுத் தன் மனைக்கு வந்த சிறுவன் சங்கரனுக்கு, ஏழ்மையின் விளைவால், ஒரு
நெல்லிக்கனியை மட்டும் அளித்த ஓர் இல்லாளின் அகத்தில் பொன்மழை பொழியச் செய்யவைத்த
நிகழ்ச்சியைச் சுட்டுவது.
No comments:
Post a Comment