<> எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம்வேண்டும்! <>
2011-ல்,
திருவனந்தபுரத்தில் ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் மறைந்திருந்த
தங்கக் குவியலைக் கண்டுபிடித்ததன் விளைவுகளை நினைத்து எழுதிய கவிதை கீழே:
கத்தும் கடலின் ஒலிதுயிலைக்
.. கலைத்தல் கண்டு காலமெல்லாம்
… கவலையின்றிக் கழிப்பதற்குக்
…. கார்வண் ணத்தான் வைகுந்தம்
ஒத்து வாரா தெனவுணர்ந்த
.. உடனே உலகின் ஓர்முனையில்
… ஒதுங்கி யிருக்கும் அனந்தபுரம்
…. உகந்த தென்றே தேர்ந்தெடுத்து
மொத்த மாகப் படுக்கையுடன்
.. முடுகி வந்து பக்தர்பலர்
… முன்னே சொகுசாய்த் தூங்குகையில்
…. மூடி மறைத்து வைத்திருந்த
சொத்தைக் காட்ட வேண்டுமென்று
.. தோன்றி அவற்றைத் திறந்துவிட,
… தூக்க மெல்லாம் தொலைந்ததம்மா!
…. தொல்லை அவனைச் சூழ்ந்ததம்மா!
அனந்த் 19-7-2011
கத்தும் கடலின் ஒலிதுயிலைக்
.. கலைத்தல் கண்டு காலமெல்லாம்
… கவலையின்றிக் கழிப்பதற்குக்
…. கார்வண் ணத்தான் வைகுந்தம்
ஒத்து வாரா தெனவுணர்ந்த
.. உடனே உலகின் ஓர்முனையில்
… ஒதுங்கி யிருக்கும் அனந்தபுரம்
…. உகந்த தென்றே தேர்ந்தெடுத்து
மொத்த மாகப் படுக்கையுடன்
.. முடுகி வந்து பக்தர்பலர்
… முன்னே சொகுசாய்த் தூங்குகையில்
…. மூடி மறைத்து வைத்திருந்த
சொத்தைக் காட்ட வேண்டுமென்று
.. தோன்றி அவற்றைத் திறந்துவிட,
… தூக்க மெல்லாம் தொலைந்ததம்மா!
…. தொல்லை அவனைச் சூழ்ந்ததம்மா!
அனந்த் 19-7-2011
No comments:
Post a Comment