<> விடுதலை <>
கேட்டுக் கேட்டுச் சலித்துப்
போயும்
.. கேட்ப(து) ஓய்வதில்லை
ஓட்டுக் குடிலில் ஓட்டை
கண்ணை
.. உறுத்தல் தெரிந்தபின்னும்
வீட்டை விட்டு வெளியே வரவோர்
.. வழியும் தெரிவதில்லை.
மீட்டும் மீட்டும் வலையில்
சிக்கும்
.. மீனாய் இருப்பதிலே
நாட்டம் இருக்கும் வரையில்
எந்த
.. நாளும் போராட்டம்
பாட்டுள் பொருளாம் பொருளுள்
பயனாம்
.. பரமன் நம்முள்ளக்
கூட்டில் சிக்க வைத்தால்
போதும்
.. கிடைக்கும் விடுதலையே!
..அனந்த் 3-5-2019
No comments:
Post a Comment