திருச்சிற்றம்பலம்
<> அரியும் அரனும் அவன் <>
அரியான் அவனை அறியான் பவத்தை
அரியான் அரியான் அறியான் – அறைவேன்
அரியான் அலன்றன் அடியார்க்(கு) அவரைப்
பிரியான் பெரியான் அவன்.
சிவன்:
எளிதில் எட்டிட இயலாதவன்; அவனை அறியாதவனது பவம் (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான்
(அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..) திருமாலும் அறியாதவன் (சிவனின் அடியைக் காண இயலாததைச் சுட்டும்.) அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் ஆகாத எளியன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் நான் கூறுவேன்.
திருமால்:
அரி என்ற பெயரைத் தாங்கியவன். அவனை அறியாதவனது பவம் (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான்
(அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..) (நர)சிங்க உருக்கொண்டவன் அல்லது வானோரிடை சிங்கம் போன்றவன். அவனுடைய பெருமையைக் கேட்டு அறிந்த நான், அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் ஆகாத எளியன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் கூறுவேன்.
No comments:
Post a Comment