உ
டொராண்டோவில்மாபெரும்
ஸஹஸ்ர சண்டி யக்ஞத்தைச்
சிறப்பாக
நடத்தியுள்ள பிரம்மஸ்ரீ யக்ஞரத்னம் அவர்களுக்கு
மக்கள் சார்பில்
வாசித்து அளித்த நன்றியுரை
அண்டம் அனைத்தும்
படைத்தளித்தும்
.. அழித்தும்
மறைத்தும் அருளுபவள்
இண்டைச் சடையோன் அரிஅயனுக்(கு)
.. எல்லாம் மேலாள்
எனமறைகள்
விண்டு விரிக்கும்
பரம்பொருளாள்
.. விண்ணோர்
மண்ணோர் துயரகற்றச்
சண்டி என்னும் பெயர்
பூண்டு
.. சகத்தைக்
காக்கும் தேவிஅவள்
எங்கோ தொலைவில்
வாழுகின்ற
.. எங்கட்
கிரங்கி யாமுய்ய
மங்காப் புகழ்சேர்
ஸ்ரீவித்யா
.. மார்க்கம்
தன்னில் மலைவிளக்காய்
மங்கா தொளிரும்
யக்ஞரத்ன
.. மணியை
எங்கட்(கு) அனுப்பியின்று
இங்கே ஸஹஸ்ர
சண்டியக்ஞம்
.. இயற்ற
வைத்தாள், கோடிநன்றி!
...அனந்த்
(அனந்தநாராயணன்) 26-7-2015

No comments:
Post a Comment