<> தாமரைத் தாளன் <>
(சந்தக்குழிப்பு: தனதனன தனதான த னதனன தனதான
தனதனன தனதான தனதான")
விடியுமொரு தனிநேர மெழு(ம்)அருண நிறமேவு
...விமலமுக மெனு(ம்)ஆறு கதிர்நாடி
அடியரவர் பலபேரு மணுகியுன துதிபாடி
...அனுதினமு வரநீயு மவர்காண
கடிபுரவி எனவோடுங் கனகமயி லதன்மேலே
...கையிலமரு(ம்) அயிலோடு வருவேளை
வடிவொழுகு பதமான கமலமலர் தனிலேஎன்
...மனமெனுமொ(ர்) அறுகாலி படியாதோ?
(வடிவு-அழகு; அறுகாலி- வண்டு)
அனந்த் 5-11-2016
No comments:
Post a Comment