<> தமிழர் கண்ட புதுமை <>
நாமகள் ஈங்கிவர் நாவினில் ’ராக்-அன்-ரோல்’
.. நர்த்தனம்
செய்வதாலே
...... நாடொறும் அகத்திலே, அலுவலில், பள்ளியில்
.......... நடக்கையில், உறங்கிடுங்கால்
மாமியின், டாடியின், அங்கிளின், ஆன்ட்டியின்,
.. மழலையின் வாயில்நித்தம்
...... மருவிடும் ஆங்கில
மொழியதன் மேன்மையில்
.......... மனமெலாம்
லயித்துநிற்க
ஸ்வாமிஜி நவின்றிடும் ஆங்கில உரையினை
.. ’ஸ்கைப்’வழி
பார்த்துநிற்பார்
...... சலிப்பது தருவதைத்
தவிர்த்திடக் ’கிடா’ரைத்
.......... தடவிமைக்
ஜாக்சனைப்போல்
பூமியில் கைகளை ஊன்றியே சுழலுவார்
.. புதியதோர்
பரதமென்று
..... புதுமையை இங்ஙனம்
தமிழர்கள் வாழ்வினில்
....... புகுத்தியே
பெருமைகொண்டார்!
அனந்த்
(19-7-2010)
No comments:
Post a Comment